சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

இரண்டாம் ஆயிரம்   திருமங்கை ஆழ்வார்  
பெரிய திருமொழி  

Songs from 948.0 to 2031.0   ( )
Pages:    Previous   1  2  3  4  5    6  7  8  9  10  Next  Next 10
வண் கையான் அவுணர்க்கு நாயகன்
      வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம்
      ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான்
      இருஞ்சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே



[1022.0]
எண் திசைகளும் ஏழ் உலகமும்
      வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்
      பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர்
      வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே



[1023.0]
பாரும் நீர் எரி காற்றினோடு
      ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற
      பிறப்பிலி பெருகும் இடம்-
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்
      சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே



[1024.0]
அம்பரம் அனல் கால் நிலம் சலம்
      ஆகி நின்ற அமரர்-கோன்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட
      மங்கை-தன் கொழுநன்-அவன்
கொம்பின் அன்ன இடை மடக் குற
      மாதர் நீள் இதணம்தொறும்
செம் புனம்-அவை காவல் கொள் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே



[1025.0]
Back to Top
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்
      சொலி நின்று பின்னரும்
பேசுவார்-தமை உய்ய வாங்கி
      பிறப்பு அறுக்கும் பிரான் இடம்-
வாச மா மலர் நாறு வார் பொழில்
      சூழ் தரும் உலகுக்கு எலாம்
தேசமாய்த் திகழும் மலைத் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே



[1026.0]
செங் கயல் திளைக்கும் சுனைத் திரு
      வேங்கடத்து உறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி
      வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்
      லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலர்
      ஆகி வான்-உலகு ஆள்வரே



[1027.0]
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்-
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா!-
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே



[1028.0]
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்-
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என்
ஆனாய்!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே



[1029.0]
கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்-
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே



[1030.0]
Back to Top
குலம்-தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
நலம்-தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்-
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா!-
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே



[1031.0]
எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன்
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்-
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே



[1032.0]
மண் ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்
புண் ஆர் ஆக்கை-தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்-
விண் ஆர் நீள் சிகர விரைஆர் திருவேங்கடவா!-
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே



[1033.0]
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்-
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா!-
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே



[1034.0]
நோற்றேன் பல் பிறவி நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன்-எம் பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே



[1035.0]
Back to Top
பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஒன்று அறியேன்-மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா!-
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே



[1036.0]
கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை
விண்ணோர்-தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்-கோன் கலியன்
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே



[1037.0]
கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன்
திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே



[1038.0]
இலங்கைப் பதிக்கு அன்று இறை ஆய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாள கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே



[1039.0]
நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு
ஏர் ஆலம் இளந் தளிர்மேல் துயில் எந்தாய்
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே



[1040.0]
Back to Top
உண்டாய்-உறிமேல் நறு நெய் அமுது ஆக
கொண்டாய்-குறள் ஆய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே



[1041.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song